கடலூரில் பல இடங்களில் மழை பெய்து வருவதால் பள்ளி கல்லூரி மாணவர்கள் அவசர அவரசமாக பேருந்துகளில் ஏறி வீடுகளுக்கு படையெடுத்தனர். இந்நிலையில், கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியில் உள்ள பள்ளியில், 11 ஆம் வகுப்பு மாணவன் கைலாஷ் தேவனாம்பட்டினம் செல்லும் தனியார் பேருந்தில் ஏறி உள்ளார். அப்போது தவறி விழுந்த அவரின் தலை மீது பேருந்தின் பின் சக்கரம் ஏறி இறங்கியுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதனையறிந்த அவரின் பெற்றோர் கதறியழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.