மழைக்காலம் தொடங்கிவிட்டதால் பலருக்கு சளி பிடிப்பது வழக்கம். இந்த டிப்ஸ ஃபாலோ பண்ணுனா சளி தொல்லையில் இருந்து விடுபடலாம். இதற்கு, வெதுவெதுப்பான நீரில் சிறிது சீரகத்தை கலந்து குடித்துவர சளி, வறட்டு இருமல் குணமாகும். சுடு நீரில் எலுமிச்சை சாரை விட்டு நன்கு கலக்கி பின் தேன் சிறிது சேர்த்து கலக்கி குடித்தால் நெஞ்சு சளி கரையும். பாலுடன், மிளகுத் தூள், மஞ்சள் தூளை கலந்து ஒரு வாரம் குடித்து வர மார்பு சளி கரையும்.