கன்னியாகுமரி மாவட்டம் கூட்டுமங்கலம் கடற்கரையில் எலும்பு கூடாக மனித சடலம் ஒன்று கரை ஒதுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் கரை ஒதுங்கிய மனித சடலத்தை கைப்பற்றிய போலீஸார், அந்த பிணம் ஆணா? பெண்ணா? என அடையாளம் காண முடியாத அளவுக்கு காட்சி அளிக்கிறது என தெரிவித்துள்ளனர். மேலும், பிணமாக மீட்கப்பட்டவர் 2 மாதங்களுக்கு முன்பே கடலில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று தகவல் அளித்துள்ளனர்.