நெல்லை மாவட்டம் சுத்தமல்லி அருகே உள்ள இந்திரா காலனியை சேர்ந்த அழகு முத்து என்பவரின் மகன் முத்துகிருஷ்ணன் (21) வாலிபர் மர்ம நபர்களால் இன்று வெட்டிக்கொலை செய்யப்பட்டார். சம்பவ இடத்தில் தற்போது போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இந்நிலையில் முத்துகிருஷ்ணன் கொலை செய்யப்பட்ட இடத்தில் எஸ். பி சிலம்பரசன் நேரில் விசாரணை நடத்தி வருகிறார். இதனால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.