நெல்லை: வரி வசூல் பிரச்சனை விவகாரம்; குரல் எழுப்பிய கவுன்சிலர்
நெல்லை பணகுடி பேரூராட்சியின் கோவில் இடத்தில் வசிப்போரிடம் வரி வசூல் செய்யாததால் பேரூராட்சி நிர்வாகத்திற்க்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று நடந்த கூட்டத்தில், ஏன் வரிவசூல் செய்யவில்லை என கவுன்சிலர் கோபி கோபாலக்கண்ணன் கேள்வி எழுப்பியபோது விரைவில் வரி வசூல் செய்யப்படும் என அதிகாரிகள் பதில் அளித்துள்ளனர். எனவே விரைவில் இப்பிரச்னைக்கு முடிவுக்கு வரும் என தெரிகிறது.