தேசிய ஒருமைப்பாட்டு தினத்தை முன்னிட்டு இன்று (அக்.30) மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து எஸ்பி சிலம்பரசன் தலைமையில் அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் காவல் துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். நாட்டின் உள் பாதுகாப்பினை உறுதி செய்ய எனது பங்களிப்பினை நல்குவேன் என்றும் உளமாற உறுதி அளிக்கிறேன் என்றும் உறுதிமொழி ஏற்றனர்.