நெல்லை அம்பாசமுத்திரத்தில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது; திமுக கூட்டணி எரிந்து போகப்போகிறது. தற்போது கூட்டணிக்குள் புகைச்சல் ஏற்பட்டுவிட்டது. சொந்த கட்சி மீது நம்பிக்கையில்லாமல் திமுக தலைமை கூட்டணியை நம்பியே அரசியல் செய்கிறது. 5 ஆண்டுகளில் திமுகவின் வாக்கு வங்கி தான் 7% குறைந்துவிட்டது. மக்கள் மத்தியில் திமுகவின் செல்வாக்கு சரிந்துவிட்டது என பேசினார்.