மொழி அடிப்படையில் மாநிலங்கள் பிரிய காரணமாக இருந்த நபர்

நாட்டில் முதல் மாநில பிரிவினைக்கு காரணமாக இருந்தவர் பொட்டி ஸ்ரீராமுலு. மாஜி ரயில்வே ஊழியரான ஸ்ரீராமுலு சென்னையில் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்தார். அவரது கோரிக்கை, அப்போதைய மதராஸ் மாகாணத்தில் தெலுங்கு பேசும் மக்கள் உள்ள பகுதிகளை பிரிக்க வேண்டும் என்பதாகும். உண்ணாவிரதத்தில் உயிர் ஸ்ரீராமுலு நீத்ததால், அவர் கோரிக்கைக்கு மத்திய அரசு அடிபணிந்து மதராஸ் மாகாணத்தில் தெலுங்கு பேசுவோர் இருந்த பகுதிகளை பிரித்து ஆந்திரா மாநிலத்தை உருவாக்கியது.