நெல்லையில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு இன்று காலை முதல் தற்போது வரை மிதமான மழை பெய்து வருகிறது. குறிப்பாக மாநகர பகுதிகளான வண்ணாரப்பேட்டை நெல்லை சந்திப்பு பாளையங்கோட்டை சமாதானபுரம் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் தொடர்ச்சியாக மிதமான மழை நீடித்து வருகிறது. இதனால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இடைவிடாது மிதமாக பெய்து வரும் மழையால் மாநகரில் குளிர்ச்சி நிலவுகிறது.