டாஸ்மாக் கடைகளில் மதுவை கூடுதல் விலைக்கு விற்றால் மேற்பார்வையாளர் உள்பட கடையில் பணியாற்றும் அனைவரும் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என டாஸ்மாக் நிர்வாகம் எச்சரித்துள்ளது. தமிழகத்தின் சில இடங்களில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட பாட்டில் ஒன்றுக்கு ரூ.10 வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ள நிலையில், டாஸ்மாக் நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. தீபாவளி விடுமுறையையொட்டி, கடந்த மூன்று நாட்களாக பல கோடிக்கு விற்பனை நடந்துள்ளது.