நெல்லை ஜல் நீட் அகாடமியில் மாணவர்கள் தாக்கப்பட்ட வீடியோ வெளியான நிலையில் இன்று அப்பயிற்சி மையத்தின் மாணவிகள் தங்கும் விடுதியில் சமூக நலத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் உரிய அனுமதி இல்லாமல் விடுதி செயல்பட்டது தெரியவந்தது. எனவே விடுதி செயல்பட்டது தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் மகளிர் விடுதிகள் தொடர்பான அனுமதி பெறுவதற்கு குறிப்பிட்ட கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டனர்.