நெல்லை திசையன்விளை பகுதியில் கடந்த 2013ம் ஆண்டு கொள்ளை வழக்கில் ஈடுபட்ட பீர்மைதீன் என்பவர் கைதாகி ஜாமினில் வெளிவந்தார். இவர் விசாரணைக்கு கடந்த 1 வருடம் 10 மாதமாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்ததால் திசையன்விளை நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. பீர்மைதீனை திசையன்விளை காவல்துறையினர் தேடிவந்த நிலையில் இன்று (அக்.30) அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.