தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் பொதிகை விரைவு ரயிலை கவிழ்க்க மீண்டும் சதி நடந்திருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. நேற்றைய தினம் செங்கோட்டையில் இருந்து சென்னை நோக்கி பொதிகை விரைவு ரயில் சென்றுகொண்டிருந்தது. அப்போது, தண்டவாளத்தில் 10கிலோ எடை கொண்ட கல் வைக்கப்பட்டது இருந்தது. இதனைப் பார்த்த லோகோ பைலட் உடனடியாக ரயிலை நிறுத்தி கல்லை அப்புறப்படுத்தினார். இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.