நெல்லை ஜல் நீட் அகாடமியில் மாணவர்கள் துன்புறுத்தப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து மாநில மனித உரிமைகள் ஆணையம் விசாரணை மேற்கொண்டனர். அதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட அகாடமியின் விடுதியில் சமூகநலத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது விடுதி அனுமதி பெறாதது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் விடுதியை காலி செய்ய கட்டிட உரிமையாளர் கூறியதால் இன்று அகாடமியின் விடுதிகள் காலி செய்யப்பட்டது.