குமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைந்த நாள் இன்று..!

74பார்த்தது
குமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைந்த நாள் இன்று..!
இந்தியா சுதந்திரம் பெற்றபோது, கன்னியாகுமரி கேரளாவுடன் இணைந்திருந்தது. ஆனால், அங்கு பெரும்பாலானோர் தமிழ் மொழி பேசும் மக்களாக இருந்தனர். இவர்கள், இம்மாவட்டத்தைத் தமிழ்நாட்டுடன் இணைக்க விரும்பினர். இதற்கான போராட்டம் வெடித்தபோது, அதை அடக்க, கேரள அரசு கடும் முயற்சிகள் மேற்கொண்டது. இதை எதிர்த்து மார்ஷல் நேசமணி தலைமையில் போராட்டம் வெடித்தது. நீண்ட போராட்டத்துக்குப் பின் நவம்பர் 1, 1956-ல் கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைந்தது.

தொடர்புடைய செய்தி