டெல்லி கணேஷின் மறைவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது X தள பக்கத்தில், "டெல்லி கணேஷ் அவர்கள், தனது ஒப்பற்ற பன்முகத் திறமையால், எண்ணற்ற கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்து, எல்லைகளைக் கடந்து சினிமா மற்றும் நாடக உலகில் அழியாத முத்திரையைப் பதித்தவர். நிரப்ப முடியாத அளவுக்கு அவரது மறைவு மிகவும் கடினமான வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.அவரது குடும்பத்தினருக்கும் அபிமானிகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்" என்று பதிவிட்டுள்ளார்.