தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தனியார் கல்லூரி பேருந்து 30-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளை கும்பகோணம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏற்றிக்கொண்டு வந்துள்ளது. அப்போது திருவிடைமருதூர் வட்டம், ஆடுதுறையில் இருந்து கல்லூரி மாணவ, மாணவிகளை ஏற்றிக்கொண்டு கல்லூரிக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது கோவிந்தபுரம் என்ற இடத்தில் எதிர்பாராத விதமாக எதிரே கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறைக்கு பூ ஏற்றி வந்த மினி வேன் மீது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் மினி வேனை ஒட்டி வந்த சுந்தரபெருமாள் கோவிலை சேர்ந்த முகமது சபீர் (27), அவரது உதவியாளர் கார்த்தி (28) ஆகியோர் வேனிலேயே உடல் நசுங்கி பலியாகினர். மேலும், கல்லூரி மாணவ, மாணவிகள் 17 பேர் பலத்த காயமடைந்தனர். மினி வேணும், பேருந்தும் நேருக்கு நேர் மோதிய சிசிடிவி காட்சி தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.