தஞ்சை: கல்லுாரி பஸ் டிரைவர், மாணவர்கள் 18 பேர் காயம்

68பார்த்தது
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சுந்தரப்பெருமாள்கோவில் பகுதியை சேர்ந்த முகமது சமீர், 27,. முப்பகோவில் பகுதியை சேர்ந்த கார்த்தி, 28,. இருவரும் கும்பகோணத்தில் உள்ள மலர் அங்காடியில் பணியாற்றி வந்தனர்.

இவர்கள் இருவரும் நேற்று காலை கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை பகுதிக்கு, லோடு வேனில் பூ ஏற்றிக்கெண்டு சென்றனர். அப்போது, கும்பகோணத்தில் உள்ள தனியார் கல்லுாரி பஸ்சில், ஆடுதுறையில் இருந்து மாணவ, மாணவிகளை அழைத்துக்கொண்டு கும்பகோணம் நோக்கி சென்றது.

இந்நிலையில், கோவிந்தபுரம் பகுதியில் வந்துக்கொண்டு இருந்த தனியார் கல்லுாரி பஸ்சின் முன்பக்க டயர் வெடித்து, சாலையில் இழுத்து சென்று, எதிரே வந்த லோடு வேன் மீது நேருக்கு நேர் மோதியது

இந்த விபத்தில் லோடு ஆட்டோவை ஒட்டி வந்த முகமது சமீர், உதவியாளர் கார்த்தி இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், கல்லுாரி பஸ்சை ஒட்டி வந்த, மயிலாடுதுறை மாவட்டம் கோமல் பகுதியை சேர்ந்த முத்துராமன், 34,. பஸ்சில் இருந்த 17 மாணவ, மாணவிகள் என 18 பேர் காயமடைந்தனர்.

இதையடுத்த அக்கம் பக்கத்தினர் திருவிடைமருதுார் போலீசாருக்கு தகவல் அளித்தனர். மேலும், 108 ஆம்புலன்ஸ் மூலம் காயமடைந்த மாணவ, மாணவிகளை மீட்டு கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்தி