ரேஷன் கடைகளில் வங்கி சேவைகளை பெறும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. கூட்டுறவு சங்கத்தால் செயல்படுத்தப்படும் ரேஷன் கடைகளில் மத்திய கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படும் சேவைகள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. ரேஷன் கடைகள் மூலமாக மத்திய கூட்டுறவு வங்கிகளில், சேமிப்பு கணக்குகளை தொடங்கலாம். ஒரு கணக்குக்கு ரூ.5 ஊக்கத்தொகையாக வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.