திருமங்கலக்குடியில் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்றது

64பார்த்தது
ரூ. 1 கோடியே 2 லட்சம் மதிப்பிலான நலதிட்டங்கலை தஞ்சாவூர் மாவட்ட வருவாய் அலுவலர் தெ. தியாகராஜன் திருமங்கலக்குடியில் நேற்று வழங்கினார்.

திருவிடைமருதூர் ஒன்றியத்தைச்சேர்ந்த திருமங்கலகுடி ஊராட்சியில் மக்கள் நேர்காணல் முகாம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. கும்பகோணம் உதவி ஆட்சியர் ஹிருத்யா எஸ். விஜயன் வரவேற்று பேசினார். | ரூ. 1 கோடியே 20 லட்சம் மதிப்பில் வருவாய்த்துறை, சமூகநலத்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட துறைகள் மூலம் பயனாளிகளுக்கு இலவச மனைப்பட்டா, தையல் இயந்திரம், வேளாண் இடுபொருட்கள், காப்பீடு, குடும்ப அட்டை பட்டா முதியோர் உதவி, மகளிர் உரிமை தொகை உள்ளிட்ட நலத்திட்ட்களை மாவட்ட வருவாய் அலுவலர் தெ. தியாகராஜன் வழங்கினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி