பட்டுக்கோட்டை - Pattukottai

தஞ்சாவூர்: மாற்று திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம்

தஞ்சாவூர்: மாற்று திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை கிடைக்கப் பெறாத மாற்றுத்திறனாளிகள் பயன்பெற வட்டார அளவில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்று தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் அறிவித்ததின்பேரில், பட்டுக்கோட்டையில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. முகாமிற்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தின் உரிமைகள் திட்ட மாவட்ட திட்ட அலுவலர் ஜான்ஹென்றி தலைமை வகித்தார். பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ அண்ணாதுரை முன்னிலை வகித்தார். இந்த சிறப்பு முகாமில் எலும்பு முறிவு மருத்துவர் டாக்டர் நவீன், கண் மருத்துவர் டாக்டர் இலக்கியா, காது, மூக்கு, தொண்டை மருத்துவர் டாக்டர் கலைவாணி, மனநல மருத்துவர் டாக்டர் மங்கையற்கரசி ஆகியோர் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்து மருத்துவச் சான்று வழங்கினர்.  முகாமில் பட்டுக்கோட்டை வட்டாரத்தில் உள்ள வெவ்வேறு ஊராட்சிகளிலிருந்து மகளிர் திட்ட பணியாளர்கள் மூலம் சமூகத்தரவு கணக்கில் பதியப்பெற்ற மாற்றுத்திறனாளிகள் அழைத்து வரப்பெற்றனர். முகாமில் நெற்கதிர் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நலச்சங்க மாவட்ட பொருளாளர் சுதாகர், பட்டுக்கோட்டை ஒன்றியத் தலைவர் அஷ்ரப் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முகாமில் 40 மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கப்பட்டது.

வீடியோஸ்


ఆదిలాబాద్ జిల్లా