மூத்த குடிமக்களுக்கான இலவச மருத்துவ காப்பீட்டு திட்டமான ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன ஆரோக்கிய யோஜனை மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக ஆயுஷ்மான் வயா வந்தனா கார்டை மத்திய அரசு அறிமுகம் செய்து வைத்தது. இந்த கார்டு அறிமுகம் செய்து வைக்கப்பட்ட வெறும் 3 வாரத்தில் சுமார் 10 லட்சம் பேர் வாங்கியுள்ளனர். இந்த தகவல் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.