பட்டுக்கோட்டையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து விவசாயிகளின் பம்பு செட்டுகளில் உள்ள மின் ஒயர்கள் திருடப்பட்டு வந்தது. மேலும் இது தொடர்பாக காவல்துறையிடம் விவசாயிகள் புகார் தெரிவித்தும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை இந்நிலையில் நேற்றிரவு ஆலடிக்குமுலை பாலமுத்தி ஆகிய பகுதிகளில் ஒரே நாளில் மட்டும் 15க்கு மேற்பட்ட விவசாயிகளின் பம்பு செட்டுகளில் உள்ள வயர்கள் மற்றும் தளவாட சாமான்கள் திருடப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆத்திக்கோட்டை ஊராட்சியில் அமைந்துள்ள காமாட்சி அம்மன் கோயில் உண்டியலை கடப்பாறை கொண்டு உடைத்து மர்ம நபர்கள் திருட முயன்ற போது கிராம மக்கள் அவர்களை கையும் களவுமாக பிடித்து அவர்கள் ஓட முயன்ற போது அவர்களை கட்டி வைத்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் காவல்துறையினர் வந்து அவர்கள் இருவரையும் பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் இருவரும் தந்தை மகன் என்பதும் அவர்கள் தந்தை செங்கப்பள்ளம் என்கிற நாடிமுத்து மகன் முத்துகிருஷ்ணன் என்பது தெரிய வந்தது. அதே கிராமத்தைச் சேர்ந்தவர்கள் இருவர் நேற்று முன்தினம் அப்பகுதியில் அங்கும் இங்கும் நடமாடியதை சிசிடிவி யில் கண்டு சந்தேகம் அடைந்த நிலையில், தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில், அந்த நபர்கள் உண்டியலை உடைக்க முயன்ற போது கையும் களவுமாக பிடிபட்டனர்.