நடிகை நயன்தாராவின் திருமணம் குறித்த ஆவணப்படத்திற்கு அவர் நடித்த படங்களின் காட்சிகளை பயன்படுத்த தடையில்லா சான்றிதழ் வழங்கியவர்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், உங்களை அணுகிய போது எந்த தயக்கமும் இன்றி தடையில்லா சான்று வழங்கியதை நினைவில் வைத்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். முன்னதாக "நானும் ரவுடி தான்" படத்தின் காட்சிகளை பயன்படுத்த நடிகர் தனுஷ் அனுமதி தரவில்லை என அவரை கண்டித்து நயன்தாரா அறிக்கை வெளியிட்டிருந்தார்.