அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் பேருந்துகள், கார், வேன்களில் வந்து செல்கின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் கடந்த இரண்டு தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
நேற்றுமுன்தினம் (அக்.31) பெய்த மழையால் அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரைச்சலையான மெயின் ரோட்டில் கடைவீதி பகுதியில் 50 மீட்டர் நீளத்திற்கு சாலையில் குளம் போல் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். இதனால் பொதுமக்களும், வியாபாரிகளும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். தேங்கி நிற்கும் மழைநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி மலேரியா, டெங்கு போன்ற தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உள்ளது.
எனவே மழைநீர் சாலையில் தேங்காமல் இருக்க வடிகால் வசதி ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதே நேரத்தில் நகராட்சி பணியாளர்கள் சாலையில் தேங்கிய மழை நீரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.