பட்டுக்கோட்டையில் தமிழர் தேசம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

82பார்த்தது
தமிழர் தேசம் கட்சி நிறுவனத் தலைவர் செல்வகுமாரின் வீட்டில் போலீசார் ரெய்டு நடத்தியதை கண்டித்து அக் கட்சியினர் பட்டுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர்



தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் தமிழர் தேசம் கட்சி மற்றும் வீர முத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் நிர்வாகிகள், தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பு தமிழர் தேசம் கட்சி மற்றும் வீர முத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் நிறுவனத் தலைவர் செல்வகுமாரின் இல்லத்தில் திருச்சி மாநகர போலீசார் திடீர் ரெய்டு நடத்தியதை கண்டித்து நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசையும் போலீசாரையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் சாலை மறியலில் ஈடுபட்ட 10 பேரை போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி