மேல ஊரணிபுரத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ வலம்புரி சித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்- ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மேல ஊரணிபுரத்தில் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ வலம்புரி சித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக பணிகள் கடந்த சில நாட்களாக தொடர்ந்து நடைபெற்ற நிலையில் நேற்று விக்னேஸ்வர பூஜை , லட்சுமி பூஜை , கோ பூஜை ஆகியவை நடைபெற்ற நிலையில் இன்று காலை சரியாக 10 மணியளவில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத புனித நீர் கலசம் ஊர்வலமாக மேளதாளங்கள் முழங்க எடுத்துச் செல்லப்பட்டு கும்பத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஊரணிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக நேற்று மாலை நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் குதிரை ஆட்டம், சிலம்பாட்டம் ஆகியவற்றுடன் ஊர்வலமாக முளைப்பாரி எடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.