தங்கம் விலையில் 2வது நாளாக மாற்றம் செய்யப்படவில்லை. சென்னையில் கடந்த சனிக்கிழமையன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.58,960 என நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை விலை மாற்றம் செய்யப்படவில்லை. அதே போல் இன்றும் (நவ., 04) எவ்வித மாற்றமும் இன்றி, கிராம் ரூ.7,875-க்கும், சவரன் ரூ.58,960-க்கும் விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.106-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.1,06,000 ஆக உள்ளது.