தஞ்சாவூர்: முதுகலை மாணவர்கள் விடுதி கேட்டு கோரிக்கை
டாக்டர் அம்பேத்கர் அரசு கல்லூரி விடுதியில் முதுகலை மாணவர்கள் தங்கி படிக்க அனுமதி வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரசு ஆதிதிராவிடர் நலத்துறை டாக்டர் அம்பேத்கர் அரசுக்கல்லூரி மாணவர் விடுதியில் முதுகலை மாணவர்கள் தங்க அனுமதி கோரி மன்னர் சரபோஜி அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் 20க்கும் மேற்பட்டோர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியதாவது: மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரியில் முதுகலை வேதியியல் இரண்டாமாண்டு பயின்று வருகிறோம். ஓராண்டாக டாக்டர் அம்பேத்கர் அரசு கல்லூரி மாணவர் விடுதியில் தங்கி பயின்று வந்தேன். தற்போது விடுதி காப்பாளர் எங்களை விடுதியை விட்டு வெளியேற சொல்கிறார். இதுகுறித்து பற்றி ஏற்கனவே மனு அளித்துள்ளோம். " எளிய குடும்பத்தை சேர்ந்தவர்கள். ஊரில் இருந்து கல்லூரி வர சரியான பேருந்து வசதி இல்லை அதனால் நாங்கள் விடுதியில் சேர்ந்து பயின்று வந்தோம். அதனால் எங்கள் கல்வி நலனை கருதி கொண்டு ஓராண்டு விடுதியில் தங்க அனுமதி தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.