பட்டுக்கோட்டை மானிய விலையில் ஊட்டச்சத்து தொகுப்பு வினியோகம்

52பார்த்தது
பட்டுக்கோட்டை மானிய விலையில் ஊட்டச்சத்து தொகுப்பு வினியோகம்
பட்டுக்கோட்டை தோட்டக்கலை உதவி இயக்குனர் ராகினி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: காய்கறி மற்றும் பழங்களின் தேவை சராசரியாக தனி நபருக்கு 400 கிராம் தேவைப்படுகிறது. ஆனால் தினசரி நுகர்வு மக்களிடையே மிகவும் குறைவாகவே உள்ளது. இதன் இடைவெளியை குறைக்கவும், மக்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்டு வீட்டுத்தோட்டத்தில் ஊட்டச் சத்து மிகுந்த செடிகள் வளர்க்க ஊக்குவிப்படுகிறது.

இதன் மூலம் தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு அன்றாட தேவைக்கான ஊட்டச்சத்து மிகுந்த பழங்கள் மற்றும் காய்கறிகள் கிடைப்பது மட்டுமின்றி செடிகளை வளர்ப்பதன் மூலம் உடலுக்கும், மனதிற்கும் உடற்பயிற்சியாக இருக்கும்.

இத்தொகுப்பில் முருங்கை, கறிவேப்பிலை, பப்பாளிச்செடி மற்றும் வாழைத் தட்டை ஆகியவை அடங்கும். இத்தொகுப்பில் ரூ. 45 அரசு மானிய தொகை போக பொதுமக்கள் ரூ. 15 செலுத்தி இத்தொகுப்பினை பெற்றுக்கொள்ளலாம். இந்த திட்டத்தில் பயன்பெற பட்டுக்கோட்டை தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி