பட்டுக்கோட்டை - Pattukottai

அதிராம்பட்டினம்: மீன் வரத்து குறைவு: மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

அதிராம்பட்டினம்: மீன் வரத்து குறைவு: மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

அதிராம்பட்டினம் கடற்கரைப் பகுதியான தம்பிக்கோட்டை மறவக்காடு, அதிராம்பட்டினம் கரையூர் தெரு காந்தி நகர், தரகர் தெரு, கடற்கரை தெரு, ஏரிப்புறக்கரை, கீழத்தோட்டம் உட்பட கடற்கரையோர கிராம மக்கள் பெரும்பாலானோர் நாட்டுப்படகுகள் மூலம் மீன்பிடி தொழில் செய்து பிழைப்பை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்துவரும் கன மழை மற்றும் புயல் எச்சரிக்கை காரணமாக கடலுக்குச் செல்ல முடியாத மீனவர்கள் இரு தினங்களாக கடலுக்கு மீன் பிடிக்க சென்று வந்தனர். இந்நிலையில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் வலையில் மிகக்குறைந்த அளவு மீன்களே அகப்பட்டது. இதனால் படகுக்குரிய டீசல் செலவுக்கே வருமானம் வராததால். பெரும்பாலான நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. கடலில் மீன்வரத்து குறைந்து மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாத நிலையில் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு தவித்து வருகின்றனர். இந்நிலையில் மீனவர்கள் தங்களது பட குகளை துறைமுக வாய்க்காலில் நிறுத்தி வைத்துள்ளனர்.

வீடியோஸ்


ఆదిలాబాద్ జిల్లా