சென்னை ஆர்.ஏ.புரம் பகுதியில் வசித்துவருபவர் சின்னத்திரை நடிகர் கார்த்திக். இவரது மகன் நித்தீஷ் ஆதித்யா(21) நேற்று நள்ளிரவு தீபாவளி கொண்டாட்டத்தை முடித்துவிட்டு நண்பர்களுடன் காரில் வந்துகொண்டிருந்தார். வேளச்சேரி - தரமணி சாலையில் வந்தபோது அவர்களது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே இருந்த தடுப்புச்சுவரில் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே நித்தீஷ் உயிரிழந்தார். மேலும் அவருடன் பயணித்த 2 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். விபத்து குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.