மொழி அடிப்படையில் மாநிலங்களைப் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆந்திராவைச் சேர்ந்த பொட்டி ஸ்ரீராமுலு 58 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்தார். இதனால் தென்னிந்தியா முழுவதும் கிளர்ச்சி வெடித்தது. பிரச்சனையை சரிசெய்யும் பொருட்டு நவம்பர் 1, 1956 மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்படும் என பிரதமர் நேரு அறிவித்தார். சென்னை மாகாணத்தில் இருந்து ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகியவை அடுத்தடுத்து பிரிக்கப்பட்டன.