பாதுகாப்பு சட்டம் கொண்டு வர வலியுறுத்தி கும்பகோணத்தில் ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் காந்தி பூங்கா முன் அனைத்து ஆசிரியர் சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று (நவம்பர் 21) நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் இருதயராஜா தலைமை வகித்தார். ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்க மாநில தலைமை நிலையச் செயலர் அறிவுடைநம்பி முன்னிலை வகித்தார். அனைத்து ஜாக்டோ ஜியோ சங்க மாநில துணைத் தலைவர் ராஜா பணிப் பாதுகாப்பு சட்டம் கொண்டு வர வலியுறுத்தினார். ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கண்ணதாசன், செல்லத்துரை, ஏகநாதன், முருகன், சாந்தி, மாநிலக்குழு உறுப்பினர் ராஜேந்திரன் திரளான ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.