தஞ்சாவூா்: சிறுமியை கடத்தியவருக்கு 2 ஆண்டுகள் சிறை

61பார்த்தது
தஞ்சாவூர் தென்வெட்டுக்காரத்தெருவைச் சோ்ந்தவா் பாஸ்கா் (53).பட்டீசுவரத்தைச் சோ்ந்த 15 வயது சிறுமியை கடந்த 14-5-2019-இல் சென்னைக்குக் கடத்திச் சென்றுவிட்டதாக சிறுமியின் தாயார் கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். 

அதன்பேரில் காவல் ஆய்வாளர் ஹேமலதா அங்கு சென்று சிறுமியை மீட்டு, பாஸ்கரைக் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு கும்பகோணம் குற்றவியல் நடுவர் மன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை நேற்று (நவம்பர் 20) விசாரித்த நீதிபதி சண்முகப்பிரியா, சிறுமியைக் கடத்திய பாஸ்கருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

தொடர்புடைய செய்தி