கும்பகோணத்தில் சிஐடியு தொழிற்சங்கம் மற்றும் கும்பகோண வட்டார போக்குவரத்து அலுவலக டாக்ஸி ஓட்டுனர்கள் உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சாலை போக்குவரத்து மாநில பொருளாளர் பார்த்தசாரதி தலைமை தாங்கினார். சி ஐ டி யு மாவட்ட தலைவர் கண்ணன், சாலை போக்குவரத்து ஒருங்கிணைப்பாளர் குகநாதன் துணை ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், சொந்த வாகனங்களை சட்ட விரோதமாக சுற்றுலா வாகனமாக இயக்கம் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நவகிரக அரசு சுற்றுலா பஸ்களுக்கு வழங்கும் அனைத்து சலுகைகளையும் உள்ளூர் சுற்றுலா வாகனங்களுக்கும் வழங்க வேண்டும். நவகிரக சுற்றுலா ஆன்லைன் முன்பதிவில் உள்ளூர் சுற்றுலா வாகனங்களுக்கு பகிர்ந்தழிக்கும் வகையில் திட்டத்தை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார். ஆர்ப்பாட்டத்தில் ஆட்டோ சங்கம் மாவட்ட தலைவர் ஜெயக்குமார், கௌரவ தலைவர் செந்தில் உள்பட சிஐடியூ தொழிற்சங்கம் மற்றும் கும்பகோண வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைகளுக்கு உட்பட்ட டாக்ஸி வேன் மற்றும் உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.