தேனி மாவட்டம் கம்பத்தில் ஐயப்ப பக்தர்கள் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில், சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த மஞ்சுநாதனின் 8 வயது மகன் சித்தார்த் உயிரிழந்தார். மேலும், காயம் அடைந்த நான்கு பேர் மீட்கப்பட்ட நிலையில் சிகிச்கைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சபரிமலைக்கு சென்றுவிட்டு சொந்த ஊர் திரும்பிய போது இந்த விபத்து ஏற்பட்டதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.