நிதியமைச்சருடன் ஜவாஹிருல்லா எம்எல்ஏ சந்திப்பு மாண்புமிகு தமிழ்நாடு நிதியமைச்சர் திரு தங்கம் தென்னரசு அவர்களை பாபநாசம் சட்டமன்ற உறுப்பினரும் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவருமான பேராசிரியர் முனைவர் எம் எச் ஜவாஹிருல்லா தலைமைச் செயலகத்தில் சந்தித்தார்.
பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் நீண்ட கால கோரிக்கையான மேட்டுத்தெரு - அரியலூர் மாவட்டம் மேலராமநல்லூர் இடையே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலம் அமைக்க விரைந்து நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மனுவை இச்சந்திப்பின் போது அமைச்சரிடம் வழங்கினார்.