சிங்கப்பூா் அமைச்சரின் ஹெலிகாப்டா் புறப்பாட்டில் தாமதம்

57பார்த்தது
கும்பகோணத்தில் பனிமூட்ட வானிலை சிங்கப்பூா் அமைச்சரின் ஹெலிகாப்டா் புறப்பாட்டில் தாமதம்
கும்பகோணத்தில் ஞாயிற்றுக்கிழமை நிலவிய பனிமூட்ட வானிலையால் சிங்கப்பூா் உள்துறை அமைச்சரின் ஹெலிகாப்டா் 15 நிமிஷங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றது.

கும்பகோணத்தில் ஞாயிற்றுக்கிழமை நிலவிய பனிமூட்ட வானிலையால் சிங்கப்பூா் உள்துறை அமைச்சரின் ஹெலிகாப்டா் 15 நிமிஷங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றது.

சிங்கப்பூா் உள்துறை அமைச்சா் சண்முகம் ஞாயிற்றுக்கிழமை காலை 7. 30 மணிக்கு திருச்சியிலிருந்து தனியாா் ஹெலிகாப்டரில் புறப்பட்டு கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியை வந்தடைந்தாா்.

அங்கிருந்து காா் மூலம் சுவாமிமலை முருகன் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்தாா். பின்னா் அங்கிருந்து அய்யாவாடி பிரத்தியங்கிரா தேவி கோயில், திருநாகேசுவரம் ராகு ஸ்தலம் ஆகியவற்றுக்கு சென்று தரிசனம் முடித்துவிட்டு மீண்டும் அரசுக் கல்லூரி ஹெலிபேட் தளத்திற்கு காலை 11 மணியளவில் வந்தாா்.

ஞாயிற்றுக்கிழமை முழுவதும் கும்பகோணத்தில் வானம் பனிமூட்டமாக இருந்தது. இதனால், ஹெலிகாப்டா் குறிப்பட்ட நேரத்திலிருந்து சுமாா் 15 நிமிஷங்கள் தாமதமாக 11. 15 மணிக்கு மயிலாடுதுறை நோக்கி புறப்பட்டு சென்றது.

கும்பகோணம் கிழக்கு, மேற்கு காவல் ஆய்வாளா்கள் சிவ. செந்தில்குமாா், ரேகாராணி தலைமையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி