சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இயங்கி வருகிறது. அந்த வங்கியின் ஜன்னல் கம்பியை அகற்றி, வங்கிக்குள் திருடன் குதித்துள்ளார். அப்போது, வங்கியில் இருந்த அலாரம், அடிக்கத் தொடங்கியது. இதனால், அந்த திருடன் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது, வீராபுரத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பது தெரியவந்துள்ளது. உடனடியாக அந்நபரை கைது செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.