கும்பகோணம் தொகுதி, சீனிவாசநல்லூர் ஊராட்சி, தென்றல் நகர் பகுதியில் வசித்து வரும் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்று, 25 KVA, 5. 30 இலட்சத்தில் புதியதாக மின்மாற்றி அமைக்கப்பட்டு, கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க. அன்பழகன் அவர்கள் மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்கள். நிகழ்வில், மத்திய ஒன்றிய செயலாளரும், ஒன்றிய துணை பெருந்தலைவர் டி கணேசன் அவர்கள், திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சுபா திருநாவுக்கரசு அவர்கள், மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் சங்கர் அவர்கள், திப்புராஜபுரம் உதவி செயற்பொறியாளர் பழனிச்சாமி அவர்கள், மற்றும் தெரு பொதுமக்கள் கலந்துகொண்டனர்.