தஞ்சாவூர்: மீண்டும் தள்ளு முள்ளு..அதிமுகவில் வெடிக்கும் பிரச்சனை
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நடந்த அதிமுக களஆய்வுக் கூட்டத்தில், கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மேடையில் பேசத் தொடங்கினார். அப்போது தொண்டர்களுக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும் எனக்கூறி கட்சியின் ஒரு தரப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளு ஆனது. முன்னதாக இன்று (நவம்பர் 22) காலை நெல்லையிலும், நேற்று (நவம்பர் 21) கன்னியாகுமரியிலும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் அதிமுகவினர் இருபிரிவுகளாக மோதிக்கொண்டனர். அதிமுகவின் மூத்த தலைவர்கள் பங்கேற்ற கூட்டத்தில் அக்கட்சியினர் அடித்துக்கொண்ட சம்பவம், தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.