இந்திய ராணுவத்தில் அக்னிவீர் திட்டத்தில் ஆட்கள் சேர்க்கப்பட உள்ளது. அதன்படி கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, மதுரை, தேனி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த விருப்பம் உள்ளவர்கள் வருகிற 10-ந்தேதிக்குள் www.joinindianarmy.nic.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். அக்னிவீர் பொது பணியாளர், தொழில் நுட்பம், எழுத்தர், தொழிலாளி ஆகிய பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளது. பட்டம் மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்படும்.
ஆன்லைனில் பொதுத்தேர்வு நடத்தப்பட்டு பிறகு ஆட்கள் சேர்ப்பு முகாம் நடைபெறும். தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும். ஆட்கள் சேர்ப்பு முறை முற்றிலும் வெளிப்படையானது. மோசடி செய்யும் ஏஜெண்ட்டுகளிடம் ஏமாற வேண்டாம். இந்த தகவலை இந்திய ராணுவத்தின் கோவை மண்டல நிர்வாக அதிகாரி கூறி உள்ளார்.