ஓமலூரில் அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

562பார்த்தது
ஓமலூரில் உள்ள சேலம் புறநகர் மாவட்ட அ. தி. மு. க. அலுவலகத்தில் புறநகர் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். 

இதில் 2026-ம் ஆண்டு நடைபெறும் சட்டசபை பொதுத்தேர்தலின் போது, அ. தி. மு. க. சார்பில் பணியாற்ற உள்ள பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமிக்கும் பணிகள் தீவிரம் அடைந்துள்ள நிலையில், அதில் இடம்பெற்றுள்ளவர்கள் எவ்வாறு களப்பணி ஆற்ற வேண்டும், வாக்குப்பதிவின் போது அவர்களுடைய செயல்பாடுகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்தும் ஆலோசனைகளை வழங்கினார். 

இந்த கூட்டத்தில் அ. தி. மு. க. அமைப்பு செயலாளர் செம்மலை, சேலம் புறநகர் மாவட்ட அ. தி. மு. க. செயலாளர் இளங்கோவன், மாநிலங்களவை உறுப்பினர் சந்திரசேகரன், சேலம் புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் மணி எம். எல். ஏ. மற்றும் எம். எல். ஏ. க்கள் ஜெய்சங்கர், ராஜமுத்து, நல்லதம்பி, முன்னாள் எம். எல். ஏ. வெற்றிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி