மான் இறைச்சி விற்ற 3 பேருக்கு ரூ. 10 லட்சம் அபராதம்

77பார்த்தது
சேலம் அருகே உள்ள தேக்கம்பட்டி வனப்பகுதியில் சேர்வராயன் தெற்கு வனச்சரக அலுவலர் துரைமுருகன் தலைமையில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வனப்பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சுற்றிதிரிந்த 3 பேரை பிடித்து வனத்துறையினர் விசாரணை நடத்தினர்.
இதில் அவர்கள் பொட்டியபுரம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி (வயது 22), மதியழகன் (28), பிரகாஷ் (26) ஆகியோர் என்பது தெரியவந்தது. இவர்கள் புள்ளிமானை வேட்டையாடி அதன் இறைச்சியை இங்கு விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து வேட்டையாடுவதற்கு பயன்படுத்திய ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அதைத்தொடர்ந்து சுப்பிரமணி, மதியழகன் ஆகியோருக்கு தலா ரூ. 4 லட்சம், பிரகாசுக்கு ரூ. 2 லட்சம் என மொத்தமாக ரூ. 10 லட்சம் அபராதம் விதித்து மாவட்ட வன அலுவலர் காஷ்யப் சஷாங் ரவி உத்தரவிட்டார். மேலும் மான், காட்டுப்பன்றி, முயல் போன்ற வன விலங்குகளின் இறைச்சியை விற்பவர்கள் மற்றும் விலைக்கு வாங்குபவர்கள் மீது வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் பாயும் என வனத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி