சேலத்தில் 2 விமானங்கள் இன்று ரத்து

62பார்த்தது
சேலம் காமலாபுரம் விமான நிலையத்தில் இருந்து சேலம், சென்னை இரு மார்க்கத்திலும் இண்டிகோ பயணிகள் விமானம் இயக்கப்படுகிறது. அதேபோல் பெங்களூரு - சேலம் - கொச்சி வரையும், அதே விமானம் மீண்டும் சேலம் வந்து பெங்களூரு செல்கிறது. அதேபோல் மற்றொரு விமானம் பெங்களூருவில் இருந்து சேலம் வந்து மீண்டும் பெங்களூரு செல்கிறது. இந்த நிலையில் இந்த 2 விமானங்களும் இன்று (திங்கட்கிழமை) ரத்து செய்யப்பட்டுள்ளது. பல்வேறு நிர்வாக காரணம் மற்றும் தொழில்நுட்ப காரணங்களுக்காக இன்று ஒரு நாள் விமானங்கள் ரத்து செய்து செய்யப்படுவதாகவும், நாளை முதல் வழக்கம் போல 2 விமானங்களும் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 2 இண்டிகோ விமானங்களும் வழக்கம்போல ஐதாராபாத்திற்கும், பெங்களூரு, சென்னைக்கும் இயக்கப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி