புத்தூர் அனுமன் ஜெயந்தி சிறப்பு அபிஷேகம்

76பார்த்தது
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே புத்தூர் கிராமத்தில் 7 அடி உயர ஆஞ்சநேயர் சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் அனுமன் ஜெயந்தி முன்னிட்டு சுவாமிக்கு பால் பன்னீர் இளநீர் தேன் சந்தனம் தயிர் ஆகிய பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் வழிபாடு நடைபெற்றது. சுவாமிக்கு பக்தர்கள் வடை மாலை, வெற்றிலை மாலை, எலுமிச்சை மாலை, பல்வேறு மாலைகள் அணிவித்து வழிபாடு செய்தனர். அனுமன் ஜெயந்தி முன்னிட்டு கோவில் முழுவதும் வாழைமரம் மலர்களால் அலங்காரம் செய்திருந்தனர். ஆஞ்சநேயர் சுவாமி வெள்ளி கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்கள் ஜெய் ஸ்ரீராம் எனக்கோஷம் போட்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி