நடிகர் தனுஷ் இயக்கத்தில் முன்னதாக பா.பாண்டி, ராயன் ஆகிய படங்கள் உருவாகியிருந்தது. தற்போது நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தையும், இட்லி கடை என்ற படத்தையும் இயக்கி வருகிறார். இந்நிலையில், "இட்லி கடை" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. ராஜ்கிரணுடன் இளைஞராக ஒரு லுக், நடுத்தர வயதில் ஒரு லுக் என தனுஷ் இரண்டு தோற்றங்களில் நடித்திருக்கிறார். மேலும் படத்தின் ரிலீஸ் தேதி ஏப்ரல் 10 என்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.