சேலம் மாவட்டம் கெங்கவல்லி அமைந்துள்ள பிரசித்தி பெற்ற காசி விசாலாட்சி உடனுரை காசிவிஸ்வநாதர் கோவிலில் சனிப்பிரதோஷ விழாவை முன்னிட்டு நேற்று நந்திபகவானுக்கு அபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மேலும் நந்தி பகவானுக்கு பால், பன்னீர், சந்தனம், மஞ்சள், இளநீர், திருநீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் கொண்டு அபிஷேகம் நடைபெற்ற பின்னர் நந்தி பகவானுக்கு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மஹா தீபாரதனை நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து காசிவிஸ்வநாதருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அங்கு திரண்டிருந்த பக்தர்கள் ஓம்சிவாய போற்றி ஓம்சிவாய போற்றி என சிவ மந்திரங்களை முழங்கி நந்தி பகவானை தரிசனம் செய்தனர்.