கேரள மாநிலம் கண்ணூர் வலக்கையில் குருமாத்தூர் சின்மயா பள்ளிக்கு சொந்தமான பள்ளி பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் ஒரு குழந்தை உயிரிழந்தது. மேலும் 14 பள்ளிக்குழந்தைகள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். சாலை இறக்கத்தில் பேருந்து இறங்கும்போது கட்டுப்பாட்டை இழந்து பலமுறை உருண்டு கவிழ்ந்துள்ளது. இதில் பேருந்துக்கு அடியில் சிக்கிய குழந்தை உயிரிழந்தது. அருகில் இருந்த உள்ளூர்வாசிகள் துரிதமாக செயல்பட்டு குழந்தைகளை மீட்டனர்.